கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் பலனளிக்குமா? – மருத்துவ நிபுணர் கேள்வி!

0
62

உலகத்தையே நடுங்க வைக்கும் கொரோனா தொற்றுநோய்க்கு பல நிறுவனங்கள் தடுப்பூசி  கண்டுபிடிக்கும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அது என்னவென்றால், “முதல் தலைமுறையினருக்கு இந்த குரோனா தடுப்பூசி பலனளிக்குமா?” என்பதே. அதாவது முதல் தலைமுறை கொரோனா தடுப்பூசிகளில் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளதாக, பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ இதழ் என்ற, ‘தி லான்செட்டில்’ என்கிற இதழில், பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவரான கேட் பிரிங்ஹாம் தெரிவித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி என்ற ஒன்றை கண்டு பிடிக்க முடியுமா என்பதே நிச்சயம் அற்றதாக உள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அவ்வாறு கண்டு பிடிப்பதன் மூலம் அந்த தடுப்பூசி எல்லா பருவத்தினருக்கும் பொருந்துமா என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். அதுமட்டுமன்றி தற்போது சோதனை கட்டங்களில் உள்ள இந்த கொரோனா தடுப்பூசிகளின் மூலம் அறிகுறிகளை குறைக்க முடியுமே தவிர, அந்த தொற்றுநோய் பரவுவதை தடுக்க இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K