தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!!

Photo of author

By Savitha

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!!

Savitha

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!!

இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கும் நிலையில் தமிழகத்திலும் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வேண்டும் என கோரி தமிழ் வழக்கறிஞர்கள் செயற்பாட்டு குழுவினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடர்ந்து ஏழாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருக்கும் வழக்கறிஞர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்களின் கோரிக்கையை பரிசிலனை செய்யக்கோரி கே.பாலு நீதிபதிகளிடம் மேல்முறையிடு செய்துள்ளார்.

மனிதாபிமானப்படி வழக்கறிஞர்களின் நிலை புரிந்தாலும் உத்தரவு பிறப்பிக்க இயலாது, மேலும் இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் தலைமை நீதிபதிகள் அமர்வு கோரியுள்ளது.