எதிர்க்கட்சித் தலைவர் யார் அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு!

0
130

சமீபத்தில் நடந்த முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை அடைந்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரையில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஊடகங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வலுவான ஒரு எதிர் கட்சியாக அதிமுக உருவெடுத்தது அதிமுக தனித்து 66 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில்m கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வென்றிருக்கிறது அதிமுக சட்டசபை தேர்தலில் 67 இடங்களில் வெற்றி பெற்று கடந்த 2006ஆம் வருடம் ஜெயலலிதா இருந்த சமயத்தில் இருந்ததை போன்ற ஒரு நிலை தற்போது உருவாகி இருக்கிறது. சென்ற 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்து சமயத்தில் ஜெயலலிதா உயிருடன் இருந்தார்.

ஆனால் அப்போது அவர்  பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்தார். அதன் பிறகு கொஞ்ச நாள் போன பின்னர் ஜெயலலிதாவே எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்துவிட்டார்.அந்த சமயத்தில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் இருந்தது. ஆகவே எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது எளிமையாக இருந்தது ஆனால் தற்சமயம் அப்படி கிடையாது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரட்டை தலைமை இருந்துவருகிறது இவர்களில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவருமே விருப்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் என்ற ஒன்றை விட்டு கொடுத்த தனக்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை தர வேண்டும் என ஒ.பி.எஸ் விரும்புவதாக தெரிகிறது.
இது தொடர்பாக விவாதம் செய்ய கேபி முனுசாமி தர்மபுரியில் இருந்து நேரடியாக ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கே சென்று விட்டாராம் அங்கே சுமார் நான்கு மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்று இருக்கிறது. அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தம்மை அறிவிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் விரும்புவதாகவும் ஆனால் அதனை பகிரங்கப்படுத்த தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதேபோல அதிமுக இப்பொழுது இருப்பது போல் தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சொன்னால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தான் அவசியம் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார் அதோடு அடுத்தடுத்த தேர்தல்களில் முக்கிய பங்கு வகிக்கும் கட்சியில் மட்டுமல்லாமல் அரசியல் களத்தில் கூட தனியாக தெரிவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி உதவி புரியும் என்பது அவருடைய கணக்காக இருக்கிறது இதற்காக தன்னுடைய ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி முன்னரே மூன்று விரட்ட தொடங்கிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் ஆனால் தேர்தலுக்கு முன்பு இருந்த ஒத்துழைப்பு தற்சமயம் எடப்பாடியாருக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் முதல்வராக இருந்த சமயத்தில் செயல்பட்டவிதம் பேச்சித்திறமை போன்றவையால் ஆற்றல்மிக்க எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி விளங்குவார் என்று சொல்லப்படுகிறது.ஆகவே அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்தால் நிச்சயமாக தற்போது ஆளும் கட்சியாக விளங்கப் போகும் திமுக மக்களுக்கு எதிராக செய்யும் செயல்களை சுட்டிக்காட்டும் முழு திறமையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அவர் முதலமைச்சராக இருந்த சமயத்திலேயே அவர் கேட்கும் கேள்விகளுக்கு முன்வைக்கும் திட்டங்களுக்கும் எதிர்மறை பேச்சுக்கலை எழுப்ப ஸ்டாலினால் இயலாத ஒரு நிலை இருந்து வந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்தால் நிச்சயமாக அது திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஅதிமுகவை அசைத்துப் பார்த்த டிடிவி தினகரன்!
Next articleதமிழகத்தில் ஆக்ரோசமாக பரவும் கொரோனா பாதிப்பு!! அலட்சியம் காட்டும் மக்கள்!!அதிகரிக்கும் உயிழப்பு!!