80 களின் முன்னணி நடிகர் திடீர் உடல்நலக் குறைவு! அதிர்ச்சியில் திரை உலகம்!

0
206
Leading actor of the 80s suddenly fell ill! Screen world in shock!
Leading actor of the 80s suddenly fell ill! Screen world in shock!

80 களின் முன்னணி நடிகர் திடீர் உடல்நலக் குறைவு! அதிர்ச்சியில் திரை உலகம்!

தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் சில வருடங்கள் தானாகவே முன்னணி நடிகர்களாக இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு வாய்ப்புகளும் குவியும், வெற்றிகளும் குவியும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களை தேடி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுப்பார்கள். அப்படி ஒரு நடிகர்தான் நவரச நாயகன் என மக்களால் புகழப்பட்ட கார்த்திக் அவர்கள்.

இவர் 80 – 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். கார்த்திக் அவர்கள் தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை என்ற பாரதிராஜாவின் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் முன்னாள் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். தற்போது இவரது மகனான கௌதம் கூட நடிகராக நடித்து வருகிறார். இவர் தற்போது மற்ற நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் வில்லனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் இவர் தன் வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துவிட்டார். இதில் அவரது காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவரை, குடும்பத்தினர்  உடனே அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கும் போது ஏற்பட்ட காலிலேயே அதுவும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டு இருப்பதன்  காரணமாக, அந்த இடத்தின் எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டது மருத்துவர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் தற்போது தீ இவன் மற்றும் அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஇதுவரை படைத்திராத சாதனை படைத்த விக்ரம் படம்!! கொண்டாட்டத்தில் படக்குழு!!
Next articleபங்கு சந்தை லைவ்: !!  டாடா ஸ்டீல் 5% உயர்ந்தது!! தத்வா சிந்தன் பார்மாவின் பங்கு விலை 95% அதிகரிப்பு!! ஐபிஓ முதலீட்டாளர்களின் பணம் இரட்டிப்பு!!