முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்கும் முன்னணி நடிகை! இவருக்கு இவர் தங்கையா? நம்பவே முடியாத தகவல்!!

Photo of author

By Parthipan K

முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்கும் முன்னணி நடிகை! இவருக்கு இவர் தங்கையா? நம்பவே முடியாத தகவல்!!

2015 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி. சாய் பல்லவி இந்தத் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தான் அறிமுகமான முதல் படத்திலேயே மலையாள மக்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, என ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதனை தொடர்ந்து 2017இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தெலுங்கிலும் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதனை தொடர்ந்து தமிழ் ரசிகர்களின் நீண்ட கால ஏக்கத்திற்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் தியா படத்தின் மூலம் 2018-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானார் சாய் பல்லவி.

அதனை தொடர்ந்து மாரி இரண்டாம் பாகத்தில் நடித்து ரவுடி பேபி பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டார். பிரேமம் படத்தின் மலர் டீச்சரை அடுத்து ‘மாரி 2’வின் ஆனந்தி கதாபாத்திரம் சாய் பல்லவி ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது. அதனை தொடர்ந்து தமிழில் ஒருசில படங்களில் நடித்த சாய் பல்லவி மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது டோலிவுட்டின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் அடுத்த படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு தங்கையாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.