முன்னணி திரைப்பட நடிகர் தற்கொலை! திரையுலகினர் மற்றும் நெட்டிசன்கள் இரங்கல்!

Photo of author

By Parthipan K

முன்னணி திரைப்பட நடிகர் தற்கொலை! திரையுலகினர் மற்றும் நெட்டிசன்கள் இரங்கல்!

Parthipan K

Leading film actor suicide! Filmmakers and netizens mourn!

முன்னணி திரைப்பட நடிகர் தற்கொலை! திரையுலகினர் மற்றும் நெட்டிசன்கள் இரங்கல்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுதீர் வர்மா.இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவாமி ரே ரே என்ற படத்திலும், செகண்ட் ஹேண்ட், குண்டனபு பொம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் திரைப்பட இயக்குனராகவும் இருந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் இவருக்கு பல விதமான சொந்த காரணங்கள் இருந்துள்ளது.

அதனால் மனமுடைந்த நடிகர் சுதீர் வர்மா விசாகப்பட்டினத்தில் உள்ள அவருடைய சொந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்களும் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

இளம் நடிகர் சுதீர் வர்மா தற்கொலை செய்து கொண்டார் அதற்கான காரணம் என்ன என்பதனை விரைவில் கண்டறியப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது.சமீப காலமாக திரைத்துறையினர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகின்றது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.