நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் சுற்று!!! ஹர்திக் பாண்டியா இல்லை என்று பிசிசிஐ அறிவிப்பு!!!

0
120
#image_title

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் சுற்று!!! ஹர்திக் பாண்டியா இல்லை என்று பிசிசிஐ அறிவிப்பு!!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 19ம் தேதி இந்திய அணி தனது 4வது லீக் சுற்றில் வங்கதேச அணியை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 41.3 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விராட் கோஹ்லி அவர்கள் சிறப்பாக விளையாடி ஒருநாள் கிரிக்கெட்டில் 48வது சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி பந்துவீசும் பொழுது ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் பந்துவீசும் பொழுது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக ஹர்திக் பாண்டியா அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு தற்பொழுது ஹர்திக் பாண்டியா அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணி தனது 5 வதுலீக் சுற்றில் நாளை(அக்டோபர்22) நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா அவர்கள். இந்திய அணியில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் போட்டி நடைபெறும் தர்மசாலாவிற்கு ஹர்திக் பாண்டியா அவர்கள் இந்திய அணியுடன் செல்லவில்லை. இதனையடுத்து காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷன் அல்லது சூர்யகுமார் யாதவ் அவர்கள் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleவிண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம்
Next articleபங்காரு அடிகளாருக்கும் எனக்கும் உள்ள உறவு தந்தை மகன் உறவு போன்றது!!! நாம் தமிழர் சீமான் பேட்டி!!!