விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம்

0
30
#image_title

விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம்

ககன்யான் திட்டத்தில் விண்வெளியில் மாதிரி சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று(அக்டோபர்21) ககன்யான் விண்கலம் விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த நிலையில் 5 நொடிகள் முன்பாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.

ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இதையடுத்து ககன்யான் திட்டத்தின் கீழ் பூமியின் தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூமியின் புவிதாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பத்திரமாக பூமிக்கு பாதுகாப்பாக திரும்ப அழைத்து வருவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தை 2025ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு மூன்று கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதையடுத்து முதல் கட்ட பரிசோதனையை ஆஸ்கர் நிறுவனம் தொடங்கியது.

இதற்கான கவுன்டவுன் நேற்று(அக்டோபர்20) காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த ககன்யான் திட்டத்திற்காக டிவி-டி1 என்ற விண்கலம் விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்தது. இது ஒற்றை பூஸ்டர் திறன் கொண்ட ராக்கெட் ஆகும்.

இந்த ராக்கெட் பூமியில் இருந்து 17 கிலோ மீட்டர் உயரம் சென்றதும் ராக்கெட்டில் உள்ள மாதிரி கலன் தனியாக பிரிக்கப்பட்டு பாராசூட்கள் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் இறக்கப்படும்.

இதையடுத்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்த ககன்யான் விண்கலம் 8 மணிக்கு விண்ணில் பாயும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சிறிது தாமதமாக 8.30 மணிக்கு விண்ணில் பாயும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மோசனமான வானிலை காரணமாக 8.45 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மூன்றாவது முறையாக கவுண்டவுன் நிறுத்தப்பட்டது.

அதாவது ககன்யான் விண்கலம் விண்ணில் பாய்வதற்கு 5 நொடிகளே இருந்த நிலையில் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள் “ககன்யான் விண்கலத்தின் என்ஜின் கோளாறு காரணமாக ககன்யான் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் திட்டமிட்டபடி ராக்கெட்டின் என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடியவில்லை. சுகன்யான் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றி ஆய்வு செய்து முதல் கட்ட சோதனை பற்றி தெரிவிப்போம்” என்று கூறியுள்ளார்.