வெளியே கசிந்த வினாத்தாள் நீட் தேர்வு ரத்து.. ஹைகோர்ட்டுக்கு பறந்த ரிட் மனு!!

Photo of author

By Rupa

வெளியே கசிந்த வினாத்தாள் நீட் தேர்வு ரத்து.. ஹைகோர்ட்டுக்கு பறந்த ரிட் மனு!!

Rupa

Leaked question paper NEET exam cancelled.. Writ petition to High Court!!

வெளியே கசிந்த வினாத்தாள் நீட் தேர்வு ரத்து.. ஹைகோர்ட்டுக்கு பறந்த ரிட் மனு!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு என்பது கட்டாயமானதாகும்.அந்த வகையில் இம்முறை மாநிலங்கள் தோறும் லட்சக் கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.இத்தேர்வு எழுதியதையடுத்து சமூக வலைத்தளத்தில் இது குறித்து வினாத்தாள்கள் பலருக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.தேசிய தேர்வு முகமையானது இதனை முற்றிலும் மறுத்தது.

இதனிடையே இது சம்பந்தமாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.ஆனால் தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் இந்த நீட் தேர்வு ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.ஆனால் மத்திய அரசோ இதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் வைத்து மருத்துவ படிப்பிற்கு தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுக்கும் முறையை பின்பற்றுவதை அமல்படுத்துமாறும் முறையிட்டு வருகிறது.

இந்த நீட் தேர்வானது சிபிஎஸ்சி அடிப்படையில் உள்ளதால் தமிழகம் மற்றும் இதர மாநில மாணவர்களுக்கு மிகவும் கடினமானதாக உள்ளது.இதனால் பல மாணவர்கள் இத்தேர்வில் தோல்வியடைகின்றனர்.இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் இவ்வாறு வினாத்தாள் கசிந்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது.மேற்கொண்டு இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசிடம் அறிக்கை அளித்ததோடு இந்த வழக்கை ஜூலை மாதத்திற்கும் ஒத்தி வைத்துள்ளனர்.

இதனிடையே நீட் தேர்வு முடிவு வர எந்த ஒரு தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.பொதுநல வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது எப்படி முடிவு வெளிய வரலாம் என்றும் மே ஐந்தாம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு வைக்க உத்தரவிடும் படி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு குறித்த வினாத்தாள் வெளியே விற்கப்பட்டிருந்தால் பல மாணவர்களின் உழைப்பானது வீணாகப் போய்விடும் என்பதின் நோக்கத்தால் தான் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.