தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!!

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!!

ஒவ்வொரு வாரத்திலும் வரும் செவ்வாய் கிழமையானது கிரகங்களின் படி செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். இந்த நாள் எந்த ஒரு நல்ல காரியங்களையும் ஆற்ற உகந்த நாளாக கருதுவதில்லை.

செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை:-

**செவ்வாய் கிழமையானது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக இருப்பதினால் இந்த தினத்தில் செல்வத்தை செலவு செய்யக் கூடாது என்பது ஐதீகம்.

**இந்த நாளில் தலை முடி வெட்டக் கூடாது. ஷேவிங் செய்யக் கூடாது. அதேபோல் நகம் வெட்டக் கூடாது. இவ்வாறு செய்தால் இரத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் நமக்கு ஏற்படும் என்பது ஐதீகம்.

**இந்த நாளில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. யாரிடமும் கடனும் கொடுக்கக் கூடாது.

**இந்த நாளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் வீட்டில் செல்வ வளம் குறையும்.

**வீட்டில் இருக்கும் பொருட்களை இந்த நாளில் வெளியில் தூக்கி எறியக் கூடாது.

**இந்த நாளில் தங்கத்தை அடகு வைக்கக் கூடாது. யாருக்கும் பணமோ, பொருளோ கொடுக்கக் கூடாது.

**செவ்வாய் கிழமையில் யாரும் எந்த தீங்கும் நினைக்கக் கூடாது. செய்யவும் கூடாது.