தெரிந்து கொள்ளுங்கள்..! புதன் கிழமை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
ஒவ்வொரு வாரத்திலும் வரும் புதன் கிழமையானது கிரகங்களின் படி புதன் பகவானுக்கு உரிய நாளாகும். இந்த புதன் கிரகத்திற்கு அதிதேவதை பெருமாள் ஆவார். இந்த கிழமையில் பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் முக்கியம் ஆகும். உங்களுக்கு எதாவது காரியத் தடை ஏற்பட்டால் புதன் கிழமை அன்று விநாயகர் வழிபாடு செய்வதன் மூலம் காரியத் தடை நீங்கும்.
இந்த நாள் எந்த ஒரு நல்ல காரியங்களை செய்ய உகந்த நாள் ஆகும். இந்த நாளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லும் அளவிற்கு இந்த புதன் கிழமை மிகவும் விசேஷமான நாள் ஆகும்.
புதன் கிழமை அன்று பித்தளை பொருட்களை வாங்குவது சிறப்பு. ஆனால் இந்த நாளில் இருக்கும் பித்தளை பொருட்களை விற்கவோ, மாற்றவோ கூடாது. கல்வி தொடர்பான எந்த செயலயையும் இந்த புதன் கிழமையில் தொடங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
புதன் கிழமை அன்று வீட்டில் இருக்கும் புத்தகங்கள் பேப்பரை விற்கவோ, எரிக்கவோ கூடாது. புதன் கிழமை அன்று வாய் தவறையும் அடுத்தவர் மனது நோகும் படியாக திட்டிவிடக் கூடாது.
இந்த நாளில் உவர்ப்பு தன்மை கொண்ட பொருட்களை உண்ணுவது நல்லது. இந்த நாளில் எண்ணெய் குளியலுக்கு உகந்த நாள் ஆகும் .
இந்த புதன் கிழமை நகை வாங்க உகந்த நாள் ஆகும். ஆடம்பர பொருட்களை வாங்க உகந்த நாள் ஆகும்.
இந்த நாளில் நகை அடகு வைக்க கூடாது. இந்த நாளில் கடன் வாங்க கூடாது. நாம் எந்த ஒரு முடிவையும் புதன் கிழமையில் எடுத்தால் நமக்கு வெற்றி நாளாக அமையும்.