LEMON GRASS BENIFITS: அருகம்புல்லை விடுங்க.. இந்த எலுமிச்சை புல்லை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள்!!
லெமன் கிராஸ் என்று அழைக்கப்படும் எலுமிச்சை புல் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்று.இதில் டையூரிடிக் பண்புகள் அதிகளவு நிறைந்திருப்பதால் உடலில் நச்சுக் கழிவுகளை அகற்ற உதவுகிறது.உடலிலுள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க லெமன் கிராஸ் உதவுகிறது.இதனால் உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும்.
லெமன் கிராஸில் தேநீர் போட்டு அருந்தி வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தொடர்ந்து லெமன் கிராஸ் தேநீர் அருந்துவதால் செரிமான சக்தி அதிகரிக்கிறது.உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க லெமன் கிராஸ் உதவுகிறது.
லெமன் கிராஸை அரைத்து முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் முகப்பரு,எண்ணெய் பிசுபிசுப்பு ஆகியவை நீங்கும்.சருமத்தில் உள்ள டெட் செல்கள் அழிந்து ஒரு வித பொலிவு கிடைக்கும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினமும் லெமன் கிராஸ் தேநீர் அருந்தி வரலாம்.இரத்த சோகை பாதிப்பு இருப்பவர்கள் தினமும் ஒரு கப் லெமன் கிராஸ் தேநீர் அருந்தி வரலாம்.
இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் தினமும் ஒரு கிளாஸ் லெமன் கிராஸ் தேநீர் அருந்தி வரலாம்.லெமன் கிராஸில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இதன் சாறு கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
லெமன் கிராஸை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
சர்க்கரை நோய்களிகள் தினமும் ஒரு கிளாஸ் லெமன் கிராஸ் தேநீர் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.