யூரிக் அமில அளவை குறைக்கும் எலுமிச்சை இலை!! இதை எப்படி பயன்படுத்துவது?

Photo of author

By Divya

யூரிக் அமில அளவை குறைக்கும் எலுமிச்சை இலை!! இதை எப்படி பயன்படுத்துவது?

Divya

நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது மூட்டு வலி,கிட்னி ஸ்டோன்,மூட்டு பகுதியில் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இந்த யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள எலுமிச்சை இலை,புதினா போன்றவற்றை கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள்.

யூரிக் அமிலம் அதிகரித்ததன் அறிகுறிகள்:

**சிறுநீரக கல்
**மூட்டு வலி
**சிறுநீரக செயலிழப்பு
**கீல்வாதம்
**நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல்
**இடுப்பு பகுதியில் வலி
**முதுகில் கூர்மை வலி

யூரிக் அமிலத்தை குறைக்கும் நான்கு இலை கொண்ட சட்னி:

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி தழை
2)புதினா தழை
3)துளசி இலைகள்
4)எலுமிச்சை இலைகள்
5)பூண்டு
6)பச்சை மிளகாய்
7)உப்பு
8)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் கொத்தமல்லி,புதினா,துளசி மற்றும் எலுமிச்சை ஆகிய இலைகளை சம அளவு எடுத்துக் கொள்ளவும்.இதனை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு நான்கு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது சுத்தமான மிக்சர் ஜார் ஒன்றை எடுத்து நறுக்கி வைத்துள்ள நான்கு வகை இலைகளை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாயை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி உப்பு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை சாதம்,சப்பாத்தி போன்றவற்றுடன் வைத்து சாப்பிடலாம்.இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.

மூட்டு வலி,எலும்பு வலி போன்ற பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது இந்த சட்னி செய்து சாப்பிட்டு வாருங்கள்.