லெமன் டீ நல்லது தான்.. ஆனால் இந்த உணவுகளுக்கு பிறகு தப்பி தவறியும் அதை குடிச்சிடாதீங்க!!

Photo of author

By Gayathri

நூற்றுக்கு 90 பேருக்கு தேயிலை டீ விருப்பமான பானமாக உள்ளது.காலையில் எழுந்ததும் டீ,காபி குடித்த பிறகே மற்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஏராளம்.தேயிலை டீயில் சில நன்மைகள் இருந்தாலும் சிலருக்கு அவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியவையாக இருப்பதால் லெமன் டீ,புதினா டீ போன்ற ஆரோக்கிய பானம் செய்து குடிப்பார்கள்.

இதில் லெமன் டீ அதிகமானோர் விரும்பி குடிக்கின்றனர்.அதில் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமான ஒரு பானமாகும்.செரிமானப் பிரச்சனை,உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு இந்த லெமன் டீ பெரிதும் உதவுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,சருமம் சார்ந்த பாதிப்புகள் குணமாக லெமன் டீ செய்து பருகலாம்.சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்ப்பதை தான் லெமன் டீ என்கின்றோம்.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.லெமன் டீ உடலுக்கு நல்லது என்றாலும் சில வகை உணவுகள் சாப்பிட்ட பிறகு அதை பருகுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு,அசைவ உணவுகள்,தயிர்,பனீர் போன்ற பால் பொருட்கள்,காரம் மற்றும் அதிக குளிர்ச்சியான உணவுகள்,பிஸ்கட்,கேக் போன்ற இனிப்பு உணவுகள் உட்கொண்ட பிறகு லெமன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் உடலில் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும்.

காலை நேரத்தில் லெமன் டீ பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆனால் உணவு உட்கொண்ட பிறகு லெமன் டீ பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் லெமன் டீயை காலை மற்றும் இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.