எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !!

0
259

எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !!

எலுமிச்சை தீபம் ஏற்றி ராகு காலத்தில் வழிபாடு செய்து வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். மேலும் அதனைப்பற்றி தற்போது காண்போம். எலுமிச்சைபழம் தீய ஆவிகளை விரட்டுவதற்கு மிகவும் பயன்படுகிறது.

மேலும் இதன் காரணமாகத்தான் மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் திரிசூலம், கதவின் இருபுறங்களிலும் இதனை நாம் வைக்கின்றோம். இதனை தொடர்ந்து தீயவைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும், மிளகாய் சேர்த்து கட்டி வீட்டிற்கு முன் தொங்கவிட்டு வைத்திருக்கும் பொது திருஷ்டி கழியும்.

ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். மேலும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விளக்கு ஏற்றினால் நோய்களால் அவதிப்படுபவர்கள் விரைவில் சரியாகி விடுவார்கள்.

செவ்வாய்கிழமை ராகு காலத்தில் பூஜை செய்தால் குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடும். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் விளக்கு ஏற்றினால் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேண்டுதல்கள் நிறைவேறும்.

இரண்டு விளக்குகளை ஏற்றி மனமுருகி வேண்டிக் கொள்ளும் போது நமக்கு உள்ள அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். மேலும் நம் மனதிலும், இல்லத்திலும் சந்தோஷம் கிடைக்கும். மேலும், அதனை எவ்வாறு ஏற்றுவது என்பதை பார்ப்போம்.

ஒரு எலுமிச்சை பழத்தை துர்க்கை சன்னதியில் இரண்டாக நறுக்கி பின் சாறு புழிந்து, பின் நூல் திரியை போட்டு கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். அதனை அடுத்து மூன்று சுற்றுகள் சுற்றி இருபது நிமிடம் அங்கே அமர்ந்து இருக்க வேண்டும்.

இருபது ஒன்றாவது நிமிடம் அங்கே இருந்துஇ வெளியே புறப்பட வேண்டும். இதுவே வழிபடுவதற்கான வழிமுறை ஆகும். மேலும் துர்க்கை அம்மனிடம் எலுமிச்சை விளக்கு ஏற்றி பூஜை செய்தால் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

author avatar
Jayachithra