சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

0
206
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.  இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பாக்கியஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் நன்மைகள் வந்து சேரும். மாலையில் ஜீவனஸ்தானத்திற்கு சந்திர பகவான் செல்வதால் பொறுப்புகள் கூடும் ஆற்றல் அதிகரிக்கும். நிதி அனுகூலமாக உள்ளது.

கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் இருந்தாலும் குடும்ப ஒற்றுமை களையாமல் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் என்ன என்று தெரியும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் எந்தவித குழப்பமும் இன்றி அருமையாக செயல்படும்.

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான நாள். துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleபசியின்மை நீங்க வேண்டுமா? இந்த காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்!
Next articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு உண்டாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here