சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!

Photo of author

By CineDesk

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்.அயன சயன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் பகவான் உள்ளதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள்.

குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு. வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் காரணமாக சில முன்னேற்பாடுகளை செய்தீர்கள். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் வரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.