சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அழைச்சாலும் உண்டாகும் நாள்!!

0
227

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அழைச்சாலும் உண்டாகும் நாள்!!

சிம்மராசி நண்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் உண்டாகும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய ஒற்றுமை சுபிட்சமான பாதையில் செல்லும்.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் சிலருக்கு நன்மைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்திச் செய்யும் எண்ணம் மேலோங்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு திடீர் பயணம் உண்டாக்கலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆதாயமும் உண்டாகும் நாள்!!
Next articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் செலவும் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here