சிம்ம ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் கூடும் நாள் 

0
230
Simmam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Simha Rasi
Simmam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Simha Rasi

சிம்ம ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் கூடும் நாள்

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு உங்கள் நாள் செலவுகள் கூடும் நாளாக உள்ளது. உங்கள் ராசியில் தினேஷ் காலத்தில் சந்திரன் இருப்பதால் செலவுகள் அதிகமாக ஆனால் கவலைகள் வேண்டாம் ஏனென்றால் சுப காரிய செலவு வந்து சேரலாம். நிதி ஓரளவுக்கு இருந்தாலும் செலவு அதிகமாக உள்ளது.

சிலருக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு வந்து சேரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பணி இடம் மாறுதல் கிடைக்கலாம். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு செலவுகள் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.நண்பர்கள் உறவினர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் செலவுகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் பயணம் மேற்கொள்வதால் இனிய பிரபலமாக மாறுவார்கள்.

கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெறுவார்கள். அதன் மூலம் வருவாய் கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு நாட்டுமருவத்துவத்தை கையில் எடுப்பார். இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை நிற ஆடையை அணிந்து மீனாட்சி அம்மனை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇந்த 2 நோய் உள்ளவர்கள் வெண்டைக்காயை எந்த நிலையிலும் சாப்பிடக்கூடாது!! உயிருக்கே ஆபத்து!!
Next articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் நாள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here