தனது இரண்டு வயது பேரக் குழந்தையை காப்பாற்ற பாட்டி சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு குனோ நேஷனல் பார்க் அருகில் உள்ள துரா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது இரண்டு வயது பேர குழந்தையை காப்பாற்ற மிகப் பெரிய கொடூரமான சிறுத்தையுடன் அந்த தாத்தா பாட்டி இருவரும் சண்டையிட்டு உள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க பசந்தி பாய் குர்ஜார் என்பவர் தனது பேரக் குழந்தை உடன் வயலில் அருகே உள்ள தனது வீட்டின் படுத்து இருந்துள்ளார். அப்பொழுது சிறுத்தையின் சத்தம் கேட்டுள்ளது. அப்பொழுது குழந்தையின் அழுகுரல் கேட்டு பசந்தி பாய் விழித்து எழுந்து பார்க்கையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அவர் கண்ணுக்கு தென்பட்டுள்ளது. 2 வயது குழந்தை அந்த சிறுத்தையின் வாயில் இருந்து உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த நின்றுள்ளார். அந்த சிறுத்தை அப்படியே அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு நகர ஆரம்பித்துள்ளது.
பசந்தி பாய் அந்த சிறுத்தையை எட்டி உதைத்து மற்றும் அலறி கூச்சலிட்டு உள்ளார். ஆனாலும் அந்த சிறுத்தை அங்கிருந்து போகவில்லை. பசந்தி பாய் அவரின் அலறல் கேட்டு மற்றும் அந்த சிறுத்தையின் சத்தத்தை கேட்ட பசந்தி பாயின் கணவர் கண் விழித்து உள்ளார். தனது முழு சக்தியை கொண்டு அவர் அந்த சிறுத்தையை எட்டி உதைத்துள்ளார்.
சிறுத்தையின் மூக்கு மற்றும் கண்களில் இருவரும் எட்டி உதைத்து குழந்தையை சிறுத்தையின் வாயில் இருந்து எடுக்க முயன்றுள்ளார்கள். சிறுத்தை அங்கிருந்து நகராமல் அவர்களை தாக்க முயற்சி செய்துள்ளது.
இவர்கள் கூச்சலிடும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் , உதவி செய்ய கையில் கோலுடன் ஓடி வரவே அந்த சிறுத்தை அங்கிருந்து காட்டுக்குள் சென்று உள்ளது.
அதன் பிறகு அவர்களுக்கும் அந்த குழந்தைக்கு முதலுதவி செய்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு உடல் தேறி வருகின்றனர். அவர்களிடம் இதைப் பற்றி கேட்கும்பொழுது நாங்கள் வருடம் வருடமாக இங்கு வசிக்கிறோம். இதுவரை எந்த மிருகமும் வந்ததில்லை. சிறுத்தை வந்து இப்படி செய்தது இதுவே முதல்முறை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். குன்னூர் ஃபாரஸ்ட் அதிகாரி பிகே வேர்மா கூறியதாவது, இந்த சம்பவத்திற்கு அடுத்து அங்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு தேவையான முதலுதவி செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.