அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!! மீனுடன் சேர்த்து சாப்பிட்டால் விஷமாகும் உணவுகள்!!

Photo of author

By Divya

அசைவப் பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மீன்.ப்ரை,வருவல்,குழம்பு,பிரியாணி,புட்டு என்று வித வித உணவுகள் மீனில் தயாரிக்கப்படுகிறது.மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,இரும்பு,புரதம்,வைட்டமின்கள் அதிகளவு நிரம்பியிருக்கிறது.

ஆனால் மீனுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அது பாய்சனாக மாறிவிடும்.மீனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் முதலிடத்தில் இருப்பது தயிர்.அப்படி சாப்பிட்டால் தோல் நோய்,செரிமானக் கோளாறு போன்றவை ஏற்படும்.மீனை ப்ரை செய்யும் மசாலாவில் தயிர் சேர்ப்பதை சிலர் விரும்புவர்.ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம்.அதேபோல் மீன் பிரியாணிக்கு தயிர் மற்றும் வெங்காயம் சேர்த்த பச்சடி சாப்பிடுவதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.மீனுடன் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படும்.

அதேபோல் மீன் சாப்பிட்ட பிறகு பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்ளக் கூடாது.மீனுடன் பால் உணவுகள் எடுத்துக் கொண்டால் வயிறு வலி உண்டாகும்.மீன் உணவுடன் கீரையை சேர்த்து சாப்பிடக் கூடாது.அவ்வாறு சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை உண்டாகிவிடும்.

மீன் சாப்பிட்ட பிறகு வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இதனால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கச் செய்துவிடும்.மீனுடன் எலுமிச்சை,ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடக் கூடாது.மீறிசாப்பிட்டால் வயிற்று வலி,குடல் பாதிப்பு ஏற்படக்கூடும்.

மீன் சாப்பிட்ட பிறகு உருளைக்கிழங்கு,ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு பொருட்களை உட்கொள்ளக் கூடாது.இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.எனவே மீன் சாப்பிடும் போது இதுபோன்ற உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.