ஜெயலலிதா பிறந்தநாளில் அனைவரும் ஒன்றிணைவோம் – சசிகலா 

0
400
#image_title

ஜெயலலிதா பிறந்தநாளில் அனைவரும் ஒன்றிணைவோம் – சசிகலா 

அனைவரும் ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம் என ஜெயலலிதா பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தமிழக மக்களிடம் இருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்கவே முடியாது.  

ஜெயலலிதா அவர்களின் எண்ணங்கள் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம் என அவரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம். பெண்ணினத்தின் அடையாளமாக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்தநாளில் , நம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய சாமானிய மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து, அம்மாவின் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். 

 

Previous articleதமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்!
Next articleஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை!