சொகுசு காரில் வருவோம்! ஆனால் கோழி திருடுவோம்!

0
167
Let's get in the luxury car! But let's steal the chicken!
Let's get in the luxury car! But let's steal the chicken!

சொகுசு காரில் வருவோம்! ஆனால் கோழி திருடுவோம்!

தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எப்படி எல்லாம் திட்டமிட்டு திருடுகின்றனர். அதுவும் காரில் வந்து ஆடுகளையும், கோழிகளையும் திருடி மக்களை வருத்த பட வைக்கும் மனிதர்கள் என்ன ஒரு ஜென்மங்கள்.

அப்படி ஒரு சம்பவம் கொரட்டூர் பகுதியில், பாடி வள்ளலார் தெருவில் பூபாலன் என்பவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். தற்போது தன் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட நாட்டு கோழிகள் திருடு போனதாக போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொள்ளும் போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை பார்த்த பொது இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

அதில், அதிகாலை 5 மணியளவில் சொகுசு கார் ஒன்று அந்த வழியாக செல்கிறது. சிறிது நேரத்தில் திரும்பி வரும் கார், கோழி இறைச்சி கடை முன்பு நிற்கிறது. காரின் பின்பக்க இருக்கையில் சிறுவன் மற்றும் இளம்பெண் அமர்ந்து உள்ளனர்.

லுங்கி மற்றும் சட்டை அணிந்தபடி காரை ஓட்டி வரும் நபர் கீழே இறங்கி சுற்றும் முற்றும், மேலும் கீழுமாக சில நிமிடங்கள் நோட்டமிடுகிறார். கடையின் வெளியே கண்காணிப்பு கேமரா இருப்பதையும், பொதுமக்கள் சிலர் அந்த நேரத்தில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்றபடி இருப்பதை கவனிக்கிறார்.

சிறிது நேரத்தில் காரின் பின்புறம் இருந்த பெரிய இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு இறைச்சி கடைக்குள் செல்லும் நபர், கோழிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் கூட்டின் பூட்டை உடைத்துவிட்டு மீண்டும் இரும்பு கம்பியை காரில் வந்து வைக்கிறார். அதைதொடர்ந்து இறைச்சி கடை கூண்டில் இருந்த கோழிகளை கொத்து கொத்தாக திருடி காரின் பின்இருக்கையில் போடுகிறார்.

இதற்கு பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் இளம்பெண்ணும், சிறுவனும் உதவி செய்கிறார்கள். இவ்வாறு 3 முறை கோழிகளை திருடும் நபர், பின்னர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிடும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் சொகுசு காரில் வந்து கோழிகளை திருடிய சிறுவன், பெண் உள்பட 3 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் கொரட்டூர் பகுதியில் கை குழந்தையுடன் கணவன்-மனைவிபோல் சொகுசு காரில் வந்து ஒரு வீட்டில் கட்டி வைத்து இருந்த ஆடுகளை திருடிச்சென்றனர்.

அதே கும்பல்தான் இந்த இறைச்சி கடையில் கோழிகளை திருடினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி வந்த வழக்கம்மாறி, தற்போது சொகுசு காரில் குடும்பமாக வந்து ஆடு மற்றும் கோழிகளை திருடிச் செல்லும் கும்பலால் கொரட்டூர் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Previous articleஉங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்!
Next articleஇந்த ராசிக்கு நெருங்கியவர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 13-06-2021 Today Rasi Palan 13-06-2021