பிஎஃப்ஐ எதிரொலி: காவல்துறைக்கு வந்த மொட்ட கடுதாசி!! கோவையின் அடுத்த 16 இடங்களுக்கு வந்த அலார்ட்!!
பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என மிரட்டல். காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் அனுப்பி உள்ள மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு அல்லது கையடி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற கடிதம் ஒன்று காவல்துறைக்கு வந்துள்ளது. அச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த வாரம் PFI அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 11 பேரையும் இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வுத்துறை கைது செய்தது.
இதைத்தொடர்ந்து கோவையின் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதுபோன்று பொள்ளாச்சியில் குமரன் நகர் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் தாக்குதல் நடத்தி, சேதப்படுத்தப்பட்டு, தீ வைக்க முயற்சி செய்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் கோவை மாவட்டம் முழுவதும் பதற்ற நிலை நீடித்தது, இதனிடையே பி எஃப் ஐ அமைப்பிற்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டது. பிஎஃப்ஐ மீது விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கோவை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கோவை மாநகரில் டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம், கோட்டைமேடு போன்ற பகுதிகளில் நேற்று முதல் போலீஸார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே பொள்ளாச்சி நகர் காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. பொள்ளாச்சி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.