துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! சலசலப்புடனும் காணப்படும் நாள்!

0
72
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! சலசலப்புடனும் காணப்படும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் கலகலப்புடனும், மாலையில் அஷ்டம ராசிக்கு சந்திர பகவான் வருவதால் சலசலப்புடனும் காணப்படுவீர்கள்.

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறலாம்.

அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயக பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.