துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

Photo of author

By CineDesk

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். பகை உணர் யோகஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் பொறுப்புடன் காணப்படுவீர்கள்.

உத்தியோகம் வெகு சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் நல்லபடியாக நடைபெறும். புதிய முதலீடுகளை துணிந்து செய்யலாம். குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.

தொழில் மற்றும் வியாபாரம் மிக சிறப்பாக அமையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்தவித குழப்பமும் இன்றி அருமையாக செயல்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். வெளிநாட்டில் உள்ள அன்பர்களுக்கு எல்லா விஷயங்களிலும் முன்னேற்றங்கள் தெரியவரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்