துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!

Photo of author

By CineDesk

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்னைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. நிதி வந்து சேர்வதற்கு காலதாமதம் ஆகலாம்.

கணவன் மனைவியிடையே சிறுசிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் போதுமானவரை குடும்ப ஒற்றுமையை கருதி அனுசரிச்சு செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அத்தியாவத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். நண்பர்கள் உறவினர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் தேவையற்ற கருத்து மோதல்கள் வேண்டாம்.

அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறை சேர்ந்த நண்பர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பாக எடுத்துக் கொள்ளும் அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.