துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

0
66
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு இரட்டிப்பாக வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை குழந்தைகள் மூலம் தெரியவரும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் சந்தோஷமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை. உபயோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani