அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்!

0
99

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்!

அத்திப்பழத்தில் உள்ள. நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அத்திப்பழம்மானது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று நாட்டு அத்தி சீமையத்தி என்று உள்ளது. நம் முன்னோர்கள் முதல் தற்போது உள்ள காலகட்டம் வரை எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு பலமாக உள்ளது. இதில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதன் காரணமாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது .

அத்திப்பழத்தில் உள்ள சத்துகளான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்த உள்ளது.

தினமும் நாம் அத்திப்பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் குணமாக கூடிய நோய்களை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

அனிமியாவை குணப்படுத்துகிறது அதாவது ரத்த சோகை இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. இவை அதிகமாக அத்தி பழத்தில் உள்ளதன் காரணமாக ரத்தச் சோகையை குணப்படுத்துகிறது.

100 கிராம் அத்திப்பழத்தில் 0.8 கிராம் இரும்புச்சத்து உள்ளது. இவை ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தின் அளவை அதிகரித்து உடலில் புதிய சிவப்பு அணுக்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. நான்கு அத்திப்பழத்தை இரவு தூங்க செல்வதற்கு முன் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை பிரச்சனை குணமாக்குகிறது.

எலும்புகளை வலுவாக்கும் எலும்புகளுக்கு தேவையான கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவு அத்திப்பழத்தில் உள்ளது. இதனை தினம்தோறும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 100 கிராம் அத்திப்பழத்தில் 35 கிராம் கால்சியம் சத்து உள்ளது இதன் காரணமாக எலும்பு பிரச்சனை முதுகு வலி உள்ளவர்கள் தினந்தோறும் சாப்பிட்டு வருவதன் மூலமாக எலும்புகள் வலுவடைய செய்கிறது.

மலச்சிக்கலை குணப்படுத்தும் நீண்ட நாள் மலச்சிக்கலினால் அவதிப்படக்கூடியவர்கள் அத்திப்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக மலச்சிக்கல் குணமடைகிறது. அத்திப்பழத்தில் அதிகப்படியான நார் சத்து உள்ளது. இதன் காரணமாக குடலில் வளவளப்பு தன்மை ஏற்படுத்தி மல சிக்கலை குணப்படுத்துகிறது.

 

author avatar
Parthipan K