துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்!

Photo of author

By CineDesk

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் உங்களின் விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் நினைக்கும் காரியம் பல நாட்களாக நழுவிக் கொண்டே போகும் அந்தக் காரியம் இப்பொழுது உங்களுக்கு அனுகூலம் தரும்.

கணவன் கணவன் மனைவி உறவு இன்றைக்கு சிறப்பாக உள்ளது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் இன்றைக்கு உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் இன்றைக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும் சிலருக்கு வேறு இடத்திற்கு மாற்றலாமா என்ற சிந்தனைகள் உருவாகும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் எதிர்பார்த்த காரியங்களை அருமையாக முடித்து சில பதவிகளை கிடைக்க பெறுவார்கள். கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுத்த காரியங்கள் நிறைவேறி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண் கணவன் வீட்டார் அன்பை பெற்று மகிழ்வார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலைகள் வந்த அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடித்து வெற்றி அடைவார்கள்.

வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் பெரும் வெற்றி பெறுவார்கள்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடையை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.