துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன்னம்பிக்கை கூடும் நாள்!
துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன்னம்பிக்கை கூடும் நாள். சகாயஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எல்லா விஷயங்களிலும் தைரியமாக செயல்படுவீர்கள்
குடும்ப உறவுகள் பக்கபலமாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை உள்ளது. பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எடுத்த காரியங்களை அருமையாக செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்க்கும் சலுகைகளையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில அதிரடியான நுணுக்கமான திட்டங்களை அறிவித்து புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்து லாபம் காண்பீர்கள்.
அரசியலுக்கு அன்பர்களுக்கு மேடைப்பேச்சுகளில் ஜொலிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் மூலம் நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.