துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள்!

Photo of author

By CineDesk

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு இன்றைக்கு சுபிட்சகமாக அமையும். கணவன் மனைவியிடையே ஒரு விதமான அன்யூனியம் திகழ்வதால் விருந்து மற்றும் கேளிக்கைகளுக்கு சென்று மகிழ்வீர்கள். வாழ்க்கை துணை வழி உறவினர்கள் மூலம் உங்களுக்கு நல்ல தகவல் ஒன்று வந்து சேரும்.

பொருளாதாரம் முன்னேற்றம் கைகொடுக்கும். வருமானம் வந்து சேர்ந்தாலும் சில செலவுகள் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் நல்ல வழியில் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வருமானம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை நினைக்கும் பெண்கள் உற்சாகத்துடன் பணிபுரிவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் காரியங்களை அருமையாக செய்து முடித்த மகிழ்வார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.