துலாம் – இன்றைய ராசிபலன்! பயணங்கள் ஏற்படும் நாள்!

0
214
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் – இன்றைய ராசிபலன்! பயணங்கள் ஏற்படும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். சுபஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் திடீரென சிறு பயணம் ஒன்று உண்டாகலாம் அதன் மூலம் உங்களுக்கு ஒரு நன்மை கிடைக்கும்.

 

உற்றார் உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். நிதி கிடைத்தாலும் செலவுகள் வந்து சேரும். கணவன் மனைவியிடையே அது அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

 

உத்தியோகத்தில் சிலருக்கு பணியிடமாறுதல் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல்கள் அதிக அற்புதமான பாதையில் செல்லும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதைக் கண்டு மனமகிழ்ந்து போவார்கள். அவர்கள் மூலம் ஆதாயம் கண்டிப்பாக வந்து சேரும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் இந்த நாள் உங்களுக்கு அருமையான நாளாக இருக்கும். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் அதி அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleகன்னி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!!
Next articleதேனின் மகத்துவம்! உடலில் உள்ள இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!