துலாம் ராசி – இன்றைய ராசிபலன் !! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!

Photo of author

By Selvarani

துலாம் ராசிஇன்றைய ராசிபலன் !! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்.அயன சயன ஸ்தானமாகி விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். நிதி அற்புதமாக இருந்தாலும் செலவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து சேரும்.

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை சிறப்பாக அமைவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும்.. தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமாக செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையில் சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.