துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!!

0
313

துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வாழ்க்கைத் துணை உறவினர்கள் மூலம் சந்தோஷமான செய்தி ஒன்று வந்து சேரும்.

பொருளாதாரம் முன்னேற்றம் அருமையாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். இரட்டிப்பாக வந்து சேர்வதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தொழில் மற்றும் வியாபாரம் வெகு சிறப்பாக அமையும். லாபகரமாகவும் மேன்மை கரமாகவும் செல்லும். அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்பு சிலருக்கு வந்து சேரும். கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்க தெளிவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எடுத்த காரியங்களில் திடம்பர செயல்பட்டு வெற்றி அடைந்து சந்தோஷமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleஉலர் திராட்சையின் மகத்துவம்! இவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் மிகவும் நன்மை!
Next articleதூங்கும் பொழுது குறட்டை வருகின்றதா? இதோ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here