தூங்கும் பொழுது குறட்டை வருகின்றதா? இதோ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள்!

0
166

தூங்கும் பொழுது குறட்டை வருகின்றதா? இதோ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள்!

இரவு உறங்கும் போது குறட்டை வருவதை எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.

நாம் இரவு உறங்கும் பொழுது தொண்டை மற்றும் நாசி வழியாக மாறி மாறி சுவாசிப்பதன் காரணமாக குறட்டை வருவதற்கு காரணமாகும். நீண்ட நாள் குறட்டை மற்றும் பயங்கர சத்தத்துடன் வரக்கூடிய குறட்டை ஆகியவற்றை நாம் எளிதாக கருதக்கூடாது.

நாளடைவில் நம் உடலுக்கு பலவிதமான தீங்குகளை ஏற்படுத்தி விடும். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு குறட்டை வருவதற்கு முதல் காரணமாகும். உடல் எடையை குறைத்து சீரான அளவில் வைத்துக் கொண்டால் குறட்டை விடுவதை தவிர்க்கலாம். மதுப்பழக்கம் உள்ளவர்கள் இதனை தினமும் அருந்துவதன் காரணமாக தொண்டை பகுதிகளில் உள்ள தசைகளை மெலிதாக்கி குறட்டை வருவதற்கு வழிவகுக்கிறது. எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

குறட்டை அதிகம் வருவதை தடுக்கும் உணவுகளான மல்லாட்டினேன் அதிகம் நிறைந்துள்ள வாழைப்பழங்கள் மற்றும் அன்னாச்சி பழங்கள், கமலா பழம் அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதன் காரணமாகவும் குறட்டையிலிருந்து நாம் விடுபடலாம்.

புகைப்பிடிப்பதன் காரணமாகவும் சுவாசப் பாதையில் எரிச்சலை ஏற்படுத்தி குறட்டை வருவதற்கு வழி வகுத்து விடும் எனவே புகை பிடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவு உறங்குவதற்கு முன் ஒரு கப் பாலில் குங்குமப்பூ கலந்து வெதுவெதுப்பாக குடிப்பதன் காரணமாகவும் குறட்டையிலிருந்து விடுபடலாம்.

இஞ்சி தேநீரை அருந்தி வருவதன் காரணமாகும் குறட்டை தொல்லை நீங்கும் இஞ்சியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் தொண்டையில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். ஒரு கப் சூடான நீரில் சிறிதளவு இஞ்சி ஒரு ஸ்பூன் தேன் கலந்த பால் குடிப்பதன் காரணமாகவும் குறட்டை விடுவதை தவிர்க்கலாம்.

 

author avatar
Parthipan K