துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியில் ஏற்படும் தளர்ச்சிகள் அகலும் நாள்!!

0
104
#image_title

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியில் ஏற்படும் தளர்ச்சிகள் அகலும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும் நாள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடி வரும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாக செல்லும். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவார்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ள பெண்கள் அருமையாக செயல்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani