துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
174

துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எல்லா செயல்களும் சுலபமாக நடைபெறும். கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவு புனிதமாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா காரியங்களையும் திறம்பட செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்த்த சலுகைகளையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில அதிரடி திட்டங்களை நுணுக்கமாக தீட்டி வெற்றியடைவீர்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleநரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்!
Next articleபுற்றுநோய் வராமல் தடுக்க உதவும் கருப்பு திராட்சை! பெண்களே தவறாமல் இதனை சாப்பிடுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here