Astrology, Religion

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைய தினம் உற்றார் உறவினர்களின் வருகை இல்லத்தில் இருப்பதால் மணமகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கை துணை உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி வாய்ப்புகள் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக பயணவாய்ப்புகள் மேம்படும்

உடல் ஆரோக்கியம் சீராக உணவு கட்டுப்பாடு அவசியம் தேவைப்படும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு உயரம் பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்து மகிழ்வார்கள்.

உறவினர்கள் நண்பர்கள் இல்லம் தேடி வருவார்கள் உதவிகளும் செய்வார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் கிடைத்து மகிழ்வார்கள். இல்லதரசிகளுக்கு உறவினர்களின் வருகை இல்லத்தில் இருப்பதால் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமாக நீல நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மன குழப்பத்திற்கு விடை கிடைக்கும் நாள்!!

குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற வேண்டுமா? இந்த கிழங்கை மட்டும் சாப்பிட்டால் போதும்!

Leave a Comment