துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்!!

0
289
#image_title

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் அனுகூலமாக செயல்படுவது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவினர்களின் வருகை இல்லத்தில் இருப்பதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகிட்னியை பாதிப்பில் இருந்து விடுபட! இந்த மூன்று உணவுகள் போதும்!
Next articleவிருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் தைரியம் மிகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here