துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முன்னால் சினேகிதரை சந்திக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முன்னால் சினேகிதரை சந்திக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பாலிய சிநேகிதரை சந்திக்கும் நாள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். கணவன் மனைவியிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்று விலகும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவீர்கள். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு தந்தை வழி உறவுகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிறம் ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.