துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆனந்தமும் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆனந்தமும் அதிகரிக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் அலைச்சலும் மாலையில் ஆனந்தமும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே சில விரிசல்கள் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் வந்து சேரும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் யோசனையுடன் செயல்படுவது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு அலைச்சல்கள் தரும் வேலை ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.