துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

0
218

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். குடும்ப உறவினர்கள் அனுகூலமாக உள்ளார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது.

வருமானம் திருப்திகரமாக வருவதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்வதால் லாபகரமாகச் செல்லும். அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாக்கலாம். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன வரவு ஒன்று வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிக முன்னேற்றம் காண்பார்கள். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவே காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!
Next articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here