கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவே காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!

0
240

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவே காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள். குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கிறது.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றம் கூடிவரும். தொழில் மற்றும் வியாபாரத்தை வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வேலை சம்பந்தமாக சில முன்னேற்பாடுகள் செய்வதினால் செலவுகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here