பொது இடங்களில் அனுமதியின்றி கழிவுநீரை விட்ட லாரிகளின் உரிமம் ரத்து! தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட தகவல்!
சென்னையை சேர்ந்த நடேசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் மூலம் இயங்கிவரும் டேங்கர்லாரிகள்
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சட்டவிரோதமாக கூவம் ஆற்றில் விட்டு வந்தனர்.இதை கண்ட பொது மக்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமிடம் புகார் அளித்தனர்.
அங்கு விரைந்து வந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த இடத்திலிருந்த அந்நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு அந்த
நிறுவனத்திற்கு சொந்தமான மொத்தம் 9 லாரிகளின் வாகனங்களின் அனுமதியை ரத்து செய்தது.
பின்பு அந்நிறுவனத்தின் மின் இனைப்பு துண்டிக்கப்பட்டு திருவள்ளுவர் மாவட்ட நிர்வாகத்தால் அந்நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டு 9 லாரிகளையும் பறிமுதல் செய்தது.
அதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் அடிப்படையில், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் திருவள்ளூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவு பிறபித்தார் . அதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகர் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி லாரிகள் சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்த கூடாது என்று நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது .
இதை தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வாரியம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,இது போன்ற செயல்களை கண்டால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உதவி எண் 18004256750 என்ற எண்ணிற்கு அல்லது மின்னஞ்சல் [email protected] மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளனர்.