LIC நிறுவனமானது கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப் என்ற புதிய திட்டத்தினை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
LIC நிறுவனமானது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ‘கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப் திட்டம்- 2024’ என்ற இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக இந்நிறுவனம் தன்னுடைய X தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.
இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக குறிப்பிடப்படுபவர்கள் :-
✓ 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வி ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு அல்லது டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வியை முடித்தவர்கள் இந்த உதவித்தொகைக்கு தகுதியுடையவர்கள். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
✓ அல்லது அதற்கு சமமான CGPA தரம் பெற்றிருக்க வேண்டும்.
பொது உதவித்தொகை 2024-25 இல் உயர் கல்வியைத் தொடர விரும்பும் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு பெண் குழந்தை உதவித்தொகை திட்டத்தின் வழிமுறைகள் :-
✓ விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
✓ 10ம் வகுப்பு அல்லது 10+2 முடித்தவர்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடிக்க விரும்புபவர்கள் இந்த சிறப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
✓ எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எல்ஐசி ஸ்காலர்ஷிப் 2024க்கான விண்ணப்ப காலக்கெடு டிசம்பர் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
LIC நிறுவனத்தின் இந்த திட்டமானது டிசம்பர் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் விண்ணப்பிக்கும் பணி தொடங்கும். உதவித்தொகையின் முழுமையான விவரங்கள், குடும்பத் தகுதி உள்ளிட்டவை இன்னும் அறியப்படவில்லை. முழுமையான விவரங்கள் அறிய LIC அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.