IPL: இந்த முறை ஐ பி எல் இல் பஞ்சாப் அணி வாங்கிய ஸ்ரேயர்ஸ் ஐயர் பலிக்கு பலி வாங்கியதை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியில் தற்போது பார்ம் அவுட் காரணமாக விளையாடாமல் இருக்கிறார் ஸ்ரேயர்ஸ் ஐயர். அவரை டெல்லி அணி வாங்கிய பிறகு வாங்கிய முதல் தொடரிலேயே 439 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். முதல் இரண்டு சீசனிலும் ப்ளே ஆஃப் அழைத்து சென்றார். தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார்.
அதன் பின் ரிஷப் பண்ட் எழுச்சியின் காரணமாக டெல்லி அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் கடந்த ஆண்டு kkr அணியின் கேப்டனாக 10 ஆண்டுகளுக்கு பின் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் இவர் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல் பட்டார்.
பஞ்சாப் அணியும் 10 ஆண்டுக்கு பின் கோப்பையை பெற்று தருவார் என பஞ்சாப் அணி இந்த முறை ஏலத்தில் இவரை ரூ.26.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுவரை ஐ பி எல் இல் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் இவர் தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நான் ஐ பி எல் இல் விளையாடுவதற்கு முன் நான் பெண் நண்பர்களுக்கு செய்தி அனுப்புவேன் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஐ பி எல் க்கு பிறகு அவர்கள் செய்தி அனுப்பி வருகிறார்கள் நான் கண்டு கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.