காதலால் தடம் புரண்ட வாழ்க்கை! சிறைக்குச் சென்ற பட்டதாரி பெண்! 

Photo of author

By Amutha

காதலால் தடம் புரண்ட வாழ்க்கை! சிறைக்குச் சென்ற பட்டதாரி பெண்! 

காதல் கணவரால் பட்டதாரி இளம்பெண் ஒருவர் குற்ற வழக்கில் சிறை சென்றுள்ளார்.

காதல் என்பது புனிதமானது. ஒரு சிலரின் வாழ்க்கையில் அது உச்சத்தில் கொண்டு சேர்க்கும். சிலரது வாழ்க்கையில் அதல  பாதாளத்தில் தள்ளிவிடும். சென்னை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதல் கணவரால் கஞ்சா வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார்.

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகருன்னிசா வயது 22. இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஆனால் அதற்குப் பின்னர் அவர் தேர்ந்தெடுத்த காதல் வாழ்க்கை அவரை தடம் புரள செய்து விட்டது. அவரின் முதல் காதல் திருமணம் தோல்வியில் முடிவடையவே, அதன் பரிசாக குழந்தை மட்டும் ஒன்று கிடைத்தது.

அடுத்ததாக அவர் முகமது ரபி என்ற மிட்டாய் ரபி வயது 22 என்பவரை காதலித்து மணந்தார். இந்த வாழ்க்கையும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவரின் வாழ்க்கையை மாற்றி உள்ளது.

ஜெகருன்னிசா எந்த வழக்கிலும் மாட்டாமல் வாழ்ந்து வந்தவர் ஆனால் அவரின் கணவரான ரஃபி ரவுடி. அவர் மீது 3 கொலை முயற்சி வழக்குகள், 2 கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட 12 வழக்குகளில் சிக்கி அடிக்கடி சிறை சென்றவர்.  இவரால் ஜெகருன்னிசாவும் கஞ்சா தொழிலை கையில் எடுத்தார்.

ஜெகன்னிசாவும், மிட்டாய் ரபியும் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள புஷ்பா நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக உதவி கமிஷனர் ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் ஷேட்டு ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். 

அப்போது ஜெகருன்னிஷா 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக போலீசாரிடம் மாட்டினார். மிட்டாய் ரபி தப்பி ஓடிவிட்டார். ஷேட்டு தலைமையிலான தனிப்படை போலீசார் மிட்டாய் ரபியையும் தீவிர தேடுதலுக்கு  பின்னர் பிடித்துவிட்டனர். முதலில் ஜெகருன்னிஷா நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு, மிட்டாய் ரபியும் சிறையில் அடைக்கப்படுவார், என்று போலீசார் தெரிவித்தனர்.