மின் பராமரிப்பாளரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!..
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வேம்பக்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் மதன். இவருடைய வயது 24. இவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிமுடிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு நிழல் கூடத்தில் நின்றிருந்தார்.மழை விடப் போவதில்லை என்று அறிந்து வீட்டிற்கு சென்று விடலாம் என்று வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது சாலையில் உயர் மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இதில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதனுடைய தாயார் சத்தியவாணி சீரங்கன் என்பவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின் கசிவால் ஏற்பட்ட விபத்தை குறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வேம்பங்குடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் விரைவில் மின்விளக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்து தருமாறும் கேட்டுக்கொண்டனர்.