திருமண தடை மற்றும் மரண கண்டம் நீங்க ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்!!

0
185

திருமண தடை மற்றும் மரண கண்டம் நீங்க ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்!!

பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில், கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் திருத்தலம் அமைந்து உள்ளது.
இந்த திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள புராதனவனேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் லிங்கத் உருவத்தில் காட்சி அளிக்கிறார்.பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

ஆடி, மார்கழி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் இந்த கோயிலில் திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடந்தபடியே இருக்கும்.

புராதனவனேஸ்வரர் என்ற பெயரிற்கு ஏற்ப்ப, இந்தக் கோவிலின் அமைப்பும், உருவச் சிலைகளும் புராதன காலத்தைச் சேர்ந்தவை போல் காட்சி தருகின்றன. இந்த ஆலயமானது புகழ்மிக்க திருமணத் தடை அகற்றும் பரிகாரத்தலமாக திகழ்கிறது.

சிவாலய தரிசனத்தை முடித்து வெளியே வந்தால், கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணத்தில் எமதர்மன் சன்னிதி ஒன்று உள்ளது. பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இந்த சன்னிதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

Previous article11-10-2022- இன்றைய ராசி பலன்கள்!
Next articleஎப்பேர்பட்ட தொப்பையையும் குறைத்து விடலாம்:! இது ஒன்றே போதும் ஒரே மாதத்தில் ஸ்லிம்மாக!!